Thursday, March 11, 2010

தமிழ் மாநில இமாம்கள் பேரவை சார்பாக சேலத்தில் மீலாது மாநாடு.

சேலம் : தமிழக இமாம்களை சேலத்தில் சங்கமிக்க வைக்கும் முயற்சியாக மாபெரும் மீலாது மாநாட்டை தமிழ் மாநில இமாம்கள் பேரவை நடத்துகிறது.

சேலம் நேரு கலையரங்கில் மார்ச் 21 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இம்மாநாடு நடைபெறும்.

காலை நிகழ்ச்சியாக உலமாக்களுக்கான ஆய்வரங்கம், பிற்பகலில் இளைஞர்களுக்கான கருத்தரங்கம், மாலையில் சமுதாயத்திற்கான சொல்லரங்கம் ஆகியவை நடைபெறுகின்றன.

இம்மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், டி.பி.எம். மைதீன் கான், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் முன்னாள் முதல்வர் மவ்லானா பி.எஸ்.பி. ஜெய்னுல் ஆபிதீன், மெலப்பாளையம் மவ்லானா காஜா முஹ்யினுத்தீன் ஹஸரத், அய்யம்பேட்டை பி.எம். ஜியாவுதீன் ஹஸரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

நாற்பது வருடங்களாக இறைப்பணியாற்றி வரும் உலமாக்கள் பற்றிய பட்டியல் இம்மாநாட்டில் வெளியிடப்பட இருப்பதால் அவர்களைப் பற்றிய விபரங்கள் வயது, பட்டம் பெற்ற வருடம், பணியாற்றும் இடம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களை அறிந்தவர்களோ உடன் தெரிவிக்க வேண்டும் தமிழ் மாநில இமாம்கள் பேரவை அறிவித்துள்ளது.

இத்தகவல்களை தமிழ் மாநில இமாம்கள் பேரவை, முஹம்மதுபுறா பெரிய பள்ளிவாசல், சேலம் – 1 என்ற முகவரிக்கு தெரிவிக்கவோ அல்லது 9443771151, 9443273280, 9952302880, 9443771520 என்ற எண்களில் தெரிவிக்க வேண்டுமென இதன் தலைவரும், உலமாக்கள் நலவாரிய உறுப்பினருமான மவ்லானா ஷிஹாபுதீன் மஹ்லரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Courtesy : Manisudar Tamil Daily

No comments:

Post a Comment